உன் மீதான அமைதியை கடத்துகிறேன்
நடுச்சமுத்திரத்தில் நுரைத்து பொங்க தெரியாத
பேரமைதியை கைகொண்டு கன்னம் ஒட்டுவது போல
ஓர் இரவு மெல்ல அசைகிறது
கரை சேரும் எண்ணமற்ற போதும்
தூரத்தில் கையசைக்கும் சிறு அலைக்காக மணலடைகிறேன்
கரை நெருங்க நெருங்க ஆர்ப்பரித்து
உந்தித் தள்ளும் அலைகளின் வேகத்தை
எதிர்கொள்ள முடியாத சிறு படகென
உயர்ந்து விழும் என் உணர்வுகளுக்கு
நுரை பூசி தரை தள்ளுகிறது
அங்கே இன்னொரு படகு பயணத்தை தொடர்கிறது….
🌺நிழலி