உயரமான மலைச் சிகரத்தில்
ஒன்றுமில்லாத மரக்கிளையில்
யானை ஒன்று அமர்ந்திருக்கு
அது யானையே அல்ல
யானை வேடம் தரித்த
எலி என்றேன்
ஏளனமாக சிரித்தனர் என்னை
எள்ளி நகையாடினர் சிலர்
பட்ட மரத்தில் யானை
ஏற முடியாது முதுகு தண்டு
நிமிர்ந்து அமர முடியாது
என்ற ஞானம் இல்லாத மூடர் சிலர்
எதையும் பின் இருந்து பார்த்தால்
பிழையாய் தான் ஆகும்
முன் சென்று பார்த்தால்
புதுக் கோணம் தோன்றும்
என்ற ஞானம் வளர
மனசு மாற வேண்டும்
சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
