ஊடுறுவும் ஒளி இடைவெளி
ஒத்தையடி பாதையிலே
அந்தி சாயும் வேலையிலே
யாருமில்லை பாதையில
மனசு உன்னை தேடுதடி
பட்ட மரம் பூக்குதடி
வானுயர்ந்த மரங்கள் எல்லாம்
வழி நெடுக நிக்குதடி
சூரிய கதிரை எல்லாம்
வடிகட்டி அனுப்புதடி
அலை அலையாய்
வெள்ள ஒளி பரவுதடி
மனசு உன்னை தேடுதடி
வானவில்லு பூக்குதடி!
ஒரு வழி பாதையாய்
வாழ்க்கை பயணம் இதில்
இரு புறமும் நீதானே
நிழல் கொடுக்கும் உருவம்!
முப் பொழுதும் உன் நினைவில்
பயணம் அது தொடரும்!
நான்கு திசையிலும்
ஊடுறுவும் ஒளி
உடை இல்லா இடை வழி!
ஐந்து பொறியிலும் இன்பம்
உன்னாலே உண்டாகும் தினம்
ஆறுதலை தரும்
உன் கரம் கோர்க்கும் வரம்!
ஏழு ஏழு பிறப்புக்கும்
இது போதும் எனக்கு
எப் பிறவி எடுத்தாலும்
இதுவே என் இலக்கு சர். கணேஷ்