எண்ணற்ற வண்ணப் பறவைகள் உலகில் உண்டெனினும் ஆடுமயிலே உன்னையே அழகு என்றார்கள்… நீ விரித்தால் விழி மிரளும் உன் சீர் மென் பீலியின் இயல்பான வண்ணங்களே எண்ணங்களை மயக்கும்போது… ஏன் இந்த போலி? எத்தனையோ உள்ளங்கள் உன் இயல்பான வண்ணங்களில் தடுக்கி விழுந்து தத்தளிக்கும்போது… எதற்காக இந்த வேஷம்? உனக்கே உனக்காக இறைவன் தந்த வண்ணங்களில் இல்லாத அழகு இந்த வேஷத்தில் உண்டென யார் சொன்னது? கர்வம்… ம்ஹ்… அது வண்ணங்களில் அல்ல நல்ல எண்ணங்களில்… இது பூராஜ் வசந்தா ரஞ்சனி.
Arulraaj
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)