என்னவனின் ரசனை படக்கருவி
ஒவ்வொரு இமை நொடிப்பொழுதும்
என் ஒவ்வொரு அசைவுகளையும்
பார்வை பரிமாற்றங்களையும்
நேச உணர்வுகளையும்
காதல் அணுக்களோடு
அணு அணுவாய்
ரசனையோடு ரசித்திடும்
என்னவனின் காந்த கண்கள்
புகைப்படகருவிக்கு ஒப்பானது…!
✍️அனுஷாடேவிட்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
