படம் பார்த்து கவி: என் இனிய

by admin 1
41 views

என் இனிய ஸிஸ்டர்(Nun)
தூங்கும்போது வரும் கனவைவிட
தூங்கவிடாமல் வரும் உங்கள்
நினைவுகளே அதிகம் ஸிஸ்டர்!
தாயின் தொடுதலறியேன்
தந்தை முகம் கண்டறியேன்!
நோயில் நான் விழும் நேரம்
நோன்பிருந்து எனைக் காத்தாய்
காணும் காட்சியெல்லாம்
அன்பான உன்னுருவம்!
ஓடி ஆடி விளையாட எத்தனை
தோழணுண்டு!
கூடிக்கதை பேசி களிப்புடனே
உண்ணும் காலம் போனதெங்கே!
பாவி நான் செய்த தவறுதான் என்ன?
நீவீர் என்னைத் தத்துக்கொடுத்த
மாயமென்ன? அங்கே,
ஒரு கண்ணில் வலி வந்தால்
பல கண்கள் கண்ணீரில்.
இங்கே பாலுண்டு, பழம் உண்டு
படுத்துறங்கப் பஞ்சு மெத்தையுண்டு,
அன்பு காட்ட ஆளில்லை,
தலைகோதும் விரலில்லை
தனிமையிலே தவிக்கின்றேன்
இவர்களின் சமூகத்தகுதிநிலையின்
அடையாளமாய் மட்டுமே நான்!
தப்பித்து வந்துவிட்டேன்,
பட்டுமெத்தை வேண்டாம்,
என் ஸிஸ்டர் மடிதான் வேண்டுமென வெகுதூரம் வந்துவிட்டேன்,
போகும் வழி தெரியவில்லை,
மேகம் மறைத்த நிலவானேன்!
தேகம் அயர்ந்து உறங்கிவிட்டேன்.
இப்படத்திலிருக்கும் என் ஸிஸ்டரிடம் எனைக்கொண்டு சேர்ப்பீர்களா ?
மு.லதா

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!