எப்போதும் அவர்களை சுமந்தே செல்லும் நமக்கு…
இன்று கிடைத்த தனிமை இனிமை!
என் கால்கள் நடக்கமுடியாது போனாலும்..நீ என்னை சுமந்து
வலம் வருவாய்..
எனக்குத் தெரியும்!
கைகட்டி நிற்கும் வானமும் பூமியும் வயதாகி நின்றாலும்
வாசனைப் பூக்களையும்
சுமந்து வருவேன்
உன் வீடே
மணம் பெற …
அவர்கள் சந்தித்து
விவாதித்து _ பின்
நிந்தித்து..
பாதை மாறி
பயணிக்க.. நாமே ஆறுதல்!
நீ அடிக்கும்
மணிசத்தம்
கேட்குமே நித்தம்!
பூக்கள் கொள்ளும் பித்தம்.. எதிரொலிக்கும்
வாழ்க்கை வண்ணம்!
அவர்கள் சேரும் வரை பிரிந்திருந்தாலும்
நாம்..
சேர்ந்து பயணிப்போம்!
அவர்கள் சேர்ந்த பின்னே.. நாம்
இருவரும் ஒருவராவோம்_
இல்லை
ஓரங்கட்டப்படுவோம்!
ஓரங்கட்டினாலும் ஒன்றாகவே இருப்போம் _ என்றும்
இளமையுடன்..!!
✍🏼தீபா புருஷோத்தமன்