சுட்ட மண்ணில் அழகான வட்டப்பானையே…..
திட்டவட்டமாக சொல்வேன்
நீயே ஏழைகளின்
குளிர்சாதன பெட்டியே!
தளிர் போன்ற கொத்தமல்லி தழையினை ஈரத் துணியில் சுற்றி வைத்தால் போதுமே
வையம் விரும்பும் வாசத்துடன்
சில நாள் இருப்பாயே….
கொளுத்தும் வெயிலில்
அலுத்து வருபவர்களின்
அலுப்பினை போக்க
கிளுகிளுப்பான உன்னுள்
மிடுக்குடன் இருக்கும்
குளிர்ந்த நீர் போதுமே….
மொத்தத்தில்……. நீ
சத்தமின்றி இயற்கை
மொத்தமாக கொடுத்த
சத்து நிறைந்த வரப் பிரசாதம்
உஷா முத்துராமன்