ஒரு அதிகாலை பொழுது
இருள் கொண்ட உள்ளங்களின் தூரோகத்தில் துயரில்
கிடந்த என்னை….
ஒரு விடியலின் சூரியக்கீற்றுகள் ஊடுருவி கரம் கொண்டு அழைத்தது…
அந்த விடியல் ஒளி என் கண்களுக்குள் இறங்கி
இருள் சூழ்ந்த மனதில் ஒளி ஏற்றி விடியலின் பாதையை காட்டியது…
நானும் அந்த பாதை நோக்கி நகர….
இரவில் இலைகள் மீது முத்தாக படர்ந்திருந்த பனி துளிகள் காற்றின் துணைக் கொண்டு
பன்னீராக பொழிந்து
என் வருகையை வரவேற்றது…..
சுற்றி பறந்த குயில்களும் கிளிகளும் ராகங்கள் பாடிட…
அதிசயம் என்னவென திகைத்த நல்ல பாம்புகளும்
புதரில் தலை தூக்கி
படம் எடுத்து ஆடின…
வானுயர்ந்த மரங்கள் சில தன் கிளைகளை அசைத்து
இலைகளையும், பூக்களையும் தூவி ஆசிர்வதித்தன…
பிரபஞ்ச துணையால் இலட்சிய வெறி கொண்டு நடந்தேன்…
நேர் திசை பயணத்தில்
பல இன்னல்களை
கண்டேன்..
காட்டாறு ஒன்று அருவியில் விழுந்து அலை புரண்டு ஓடியது…
எண்ணிய எண்ணம் நடக்க …
மானம் காக்க…
துரோகம் தீர்க்க…
இலட்சிய பாதையில் போராடி கடப்பது தான் வாழ்க்கையின் வெற்றி என்பதை உணர்ந்தேன்.!!!
— இரா. மகேந்திரன்—-