ஒரு நாள் மனிதனால் துய்க்கப்படுவாய் என்று நிதர்சனமாய் கண்ட தீர்க்கதரி நீ! உன் திமிருக்கு தலை வணங்குகிறேன். காரணம்… உலகின் இயக்கத்திற்கு கர்த்தா நீ… உயிர்களின் தோற்றம் உன்னால் தான். என் அன்னைக்கும் அன்னையானவள் அனைத்துமானவள் . உலகையே தன் கருப்பைக்குள் சுமந்து ஈன்றெடுக்காமலே அரணாகின்றாய். என்னை சுமந்தவள் பத்தாம் திங்களில் தத்துக்கொடுத்தாள் உன்னிடம். நீயோ… தொட்டிலாகி, நடை வண்டியாகி, கட்டிலாகி, நன்காட்டில் சாம்பலாகி என்னோடு இரண்டறக் கலந்தாய். உன்னையே என் அன்னை என்பேன். அம்மா… கற்பகத்தருவே இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்.
பூராஜ் வசந்தா ரஞ்சனி