ஒளிப்படக்கருவி
காலமும் நேரமும் பல யுகங்களை தாண்டி சென்றுக் கொண்டிருக்கும் தருணத்தில்
நிலையற்ற இந்த வாழ்வின் ஒவ்வொரு நிமிட நிஜங்களையும்
காலவோட்டத்தில் மானிடன் மறந்த கணம் மீண்டும் அசை போட்டு பார்க்க
உன் ஜனனமும் நிகழ்ந்து உன்னால் புகைப்பட குழந்தையும் பிரசவிக்கப் பட்டதே இப் பாரினில்.
நீ பிரசவிக்கின்ற ஒவ்வொரு புகைப்பட குழந்தைகளும்
இந்த நாடக பூமியின் நாடக பிரதிகளே…
பாரின் அழகினை மட்டுமல்ல பாரில் நிகழ்ந்த பல அழிவுகளின் நிஜங்களையும் உன் தயவால் தானே கண்கூடாக காண்கிறோம்
ஒளிப்படக்கருவியே…
இவ் வையத்தில் எதிர்கால ஞாபக சின்னங்கள் உன் புகைப்பட குழந்தைகள் மட்டுமே… - ரஞ்சன் ரனுஜா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
