கடமை கண்ணியம் கட்டுப்பாடு
கட்டிய வீடாய் நினைத்து
கட்டாந் தரையிலோர்
கற்பனைவீடு
காலணி கூட வெளியில்
விட்டு
நான்கு சுவர்களுக்குள்
நலமுடன்
நன்றாய்த் தூங்கி மகிழ்கின்றாய்
வாழ்வில் வெற்றி உன்வசம்
வந்து சேரும் தானாக!
விளையும் பயிர் முளையிலே
வீணாகாது உன் வாழ்க்கை
வாழ்க வளத்துடன்
கண்மணியே!
கவிஞர்
சே. முத்துவிநாயகம்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)