கண்ணே…..
என்னோடு கலந்து
பிரிந்தாய்
பிரிவால் நொறுங்கிய
இதயமெனும்
கண்ணாடியில் பிரதி
பிம்பமாய்
உன்னுருவம் பற்பல
வடிவில்
கடந்த காலம் (நீ)
இறந்த(பிற்) காலமாய்
மலரும் நினைவுகளின்
துணையொடு……
இதுவும் கடந்து போகும்
எதுவும் மறந்துபோகாது
பத்மாவதி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)