தலைப்பு: கனவான காதல்
நினைவெல்லாம் நீயே கண்ணே
கனவெல்லாம் வந்து போகினையே
மனதெல்லாம் நிறைந்திருப்பவளே
என் மகிழ்ச்சியைப் பறித்தது ஏன்?
அனுதினமும் உன்னுடன் இருந்த நாட்களெல்லாம், ஆரவாரத்துடன் சென்றனவே.
அழகான உன் வதனம் காணும் போதெல்லாம், அழகிய ஆண்டுகள் வலம் வந்தனவே.
சுற்றாத ஊர் இல்லை, சுகத்திற்கு பஞ்சமில்லை, சுற்றாரைக் கண்டு நாம் அஞ்சவில்லை, பெற்றோரும் நம்மை மதிக்கவில்லை.
சொல்லாமல் ஓர் நாள் இக்கலியுகத்தை விட்டாய். ஐயகோ, என்தன் வாழ்வினிலே வலியொன்றை விதைத்தாய்.
தளராமல் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன், தாரகையே நீ வாங்கிய சத்தியத்தால்.
அனுப்புநர்: சிவராமன் ரவி,
பெங்களூரு 560016.