கருவறைக்குள் கண்டதெல்லாம்
கருமையன்று வேறொன்றில்லை
கண் திறந்து கொண்டபோதும்
புது நிறமென்று ஏதொன்றுமில்லை
பார்வையற்றவன் பட்டத்துடன்
பார் போற்ற வலம் வந்தவன்
வெள்ளைப் பிரம்போடு
கறுப்புப் பாதையில் பயணித்தவன்
ஓவியங்களை ஓரக்கண்ணாலேனும்
ஒருகாலும் கண்டதில்லை
நிறங்களை மனக்கண்ணாலும்
நொடிப்பொழுதும் இரசித்ததில்லை
ஒளியிழந்த என் விழியூடாக
மனதுள் எழும் வண்ணங்களை
காண்பவர்கள் இங்கு உண்டா?
அந்த நிறத்திற்கு பெயர் உண்டா?
*சித்திரவேல் அழகேஸ்வரன்*
இலங்கை
படம் பார்த்து கவி: கருவறைக்குள்
previous post