கருவாகி….. உருவாகி……
என் தாயின் மறு உருவாக பிறந்து வளர்ந்த என் அன்பு தேவதையே…
என் சிறு வயது முதல்..
என்னை உருவாக்கி
ஆளாக்க நீ பட்ட துயர்
நான் அறிவேனம்மா….
அன்பால் உணவூட்டி
என் கல்வி கண்ணை திறந்த அன்பு தெய்வமே…
உன் பிரிவால் காயம் கொண்ட இதயத்திற்கு மருந்தாக பிறந்தயோ… அம்மா…
உன் அழு குரல் கேட்டால் இதய துடிப்பும் ஆடி விடுதே கண்ணம்மா…
உன் புன்னகை கண்டால் என் மனமும்
துயர் நீக்கி வானில் மிதக்க வைக்குதே கண்ணம்மா…
என்னை தோளில் சுமந்தும்..
என்னை தூக்கி விளையாடியும் மகிந்தாயே….
இன்று உன்னை நான் தோளில் சுமந்தும் …
தூக்கி விளையாடி மகிழவும்….
என் தாய் எனக்கு குழந்தையானதும் …
நான் என் தாய்க்கு தந்தை ஆனதும் …
இப்பிறவின் மோட்சம்
என்பேன்…
கண்ணம்மா…
— இரா. மகேந்திரன்—