கரைகளை வந்து முத்தமிடும்
கடல் அலையே
தமிழனின் வீரத்தை
உலகுக்கு பறைசாற்றுகிறாயா
அலையே தமிழனின்
வீரத்தின் எல்லையை
தேடுகிறாயா
அலையே நீவற்றி
கடல் சாகுமா
சோழர்பரம்பரையின்
வீரம் வீழ்ச்சி அடைந்திடுமா
உன்னில் கவிபாடி
துயில் கொள்ள சென்ற வீர மீனவர்களின் துயரத்தை அறிவாயா
அலையே கரன் தன் கதிர்வீச்சு
படையினால் உன்னை பற்றி
கவி எழுதினா
சத்தமில்லாத
முத்தங்களை கற்றுத்தரும் கடல் அலையே…
M.W Kandeepan