அரூபி
தேடினேன் எங்கும் இருக்கும் தேவியை
நாடினேன் அவள் தாள் பற்றிட
கோயில்கள் பல ஏறியும்,
மந்திரங்கள் பல சொல்லியும்,
தானங்கள் பல செய்தும்,
தேடி தேடி அழைகிறேன்
ஆதிபராசக்தியை
அருவியென கொட்டும் எண்ணங்களை தாண்டி
அரூபியை தேடினேன் எங்கோ, எங்கெங்கோ
பக்தி கடலில் சட்டென்று குதித்தேன்
யோக நீச்சலில் கரை சேர நீந்தினேன்
ஞானமாக உடலையும் உள்ளத்தையும்
ஓரிடமாக செலுத்த
கண்டேன் எனக்குள் இருக்கும் இறைவியை
கரைந்தேன் அரூபியாக
— அருள்மொழி மணவாளன்