கரை என்றுமே நல்லதல்ல
மனிதனின் பரிணாம வளர்ச்சி!
குரங்கிலிருந்து,
கரை நீக்கும் பஞ்சின் வளர்ச்சி! மண்ணிலிருந்து,
கரை போனதா?
வீட்டம்மாளிலிருந்து
வேலைக்காரி வரை
இல்லை! இல்லை!
பஞ்சு அழுதது,
கசக்கி, பிழிந்து, மடக்கி, தேய்த்து,
எனை கொன்றும் வெறுமையா?
கரை நல்லதல்ல தான்!
எனை தேய்த்து, தேய்த்து சின்னா பின்னமாக்கி கொன்றும் திறவில்லையா?
அடுத்தொரு பிறவியில் பஞ்சாக வேண்டாம், சவர்காராமாக!
கண்ணில் பட்டால் நீரை வரவைக்க…
சுஜாதா.
படம் பார்த்து கவி: கரை என்றுமே நல்லதல்ல
previous post