ஆழி அலையாய்
அலைச்சல் பணியேற்று
அகப்பை சுமந்த
அகவுகளைக் காத்து
அசராமல் கழிவு கழுவி
அடுக்களையில் அவிந்து
அர்த்த ராத்தியில் அயர்ந்து
ஆதவனுக்கு முன் எழுந்து
ஆசைகள் ஆயிரம் துறந்து
அங்கும் இங்குமாய்
அவமானங்கள் சுமந்து
அடிமரமாய் சுமையேற்று
கிளைகளைக் கரைசேர்த்து
ஓடிய பெரும் ஓட்டத்தில்
அயர்ந்த உடல் தளர்ந்திட
ஆதாயமற்ற அநாவசியமென
தொத்தி நின்ற அத்தனையும்
தொரத்திடவே விளைகிறதே!
பிசுக்கேறிய ஏனம்தனைத்
தேய்த்துத் தேய்ந்ததும்
தூக்கி எறியப்படும்
நாரும் நானும் ஒன்றோ!
புனிதா பார்த்திபன்