இனிய ரம்புத்தான் கனி.
காட்சிக்கு முரடாக,
தொடலுக்கு பஞ்சாக
கிள்ளி பிளக்க
கையடக்க நுங்கு அனைய;
மேவிய இனிப்பும்
சற்றே புளிப்புமாய்
சராசரி வாழ்க்கை
தத்துவம் போதிக்கும்;
இயற்கை அளித்த
ஒரு தேவேந்திர போகம்.
குற்றால பழம் என
என் சிற்றாடை வயதினில் கொண்டாடிய கனி.
சாமானியனுக்கு எட்டா பழம்;
பெகுமானவர்க்கே எட்டும்
எட்டாத பழத்திற்கு
கொட்டாவி மட்டும்.
சசிகலா விஸ்வநாதன்