நீ அழுதால்
என்னையுமறியாமல் கண்ணீர் வருகிறது
நீ சிந்தும் கண்ணீர்
இந்த பிரபஞ்சத்தில் உள்ள
எந்த கிரகங்களின்
பூமி தொடாத படி ஓடி வந்து துடைக்க வேண்டும்
உனக்கு ஆறுதலாய் என் மடி தர வேண்டும்
உனக்கு எப்போதும் நானிருக்கிறேன் என சப்தமிட்டு சொல்ல வேண்டும்
உன் உதடுகளில் புன்னகை மட்டுமே நிறைய வேண்டும்
எனக்கு என்ன ஆயிற்று?
என்னை விட
உன்னையே உயிராய் நினைத்து நேசிக்கிறேன்.
ஓ……
இதுதான் காதலென்னும் கொடிய நோயா?!
-லி.நௌஷாத் கான்-