காரிருளில் தன்னந்தனிமையில்
மழையின் சாரலை ஜன்னல் வழியாக
வெறித்து பார்த்திருந்தேன்
தொலை தூர கலங்கரை
விளக்கொளியின் வெளிச்சம் போல்
வந்துவந்து சென்றது உன் முகம்
சாளர கண்ணாடியில் வடியும் மழை துளிகள் போல்
உன் நினைவுகளும் என் இதயத்தில் வலியுடன் வடிகிறதே
- அருள்மொழி மணவாளன்