கார்முகில் கண்ணன்
சுழன்று வந்தான்
கடல் நீர் அருந்த..
பெண்ணவளின்
கடல் வர்ண
கண்களிலே
காதல்கொண்டான்
கடல் நுரையாக..
ஆதியவன்
ஒளி படர..
கடலும் முகிலும்
கலவி கொள்ள..
தென்றல் காற்றின்
சாட்சியில் ..
காதல் சாரல்
ஆட்சியில் ..
மழைவில்லும்
ஒதிங்கிக்கொள்கிறது
தீராக்காதல்
சுழற்சியில்…
🤍✨ இளயவனின் நறுமுகை இவள் ✨🤍