கிடைப்பதற்கரிய வரம்
பொய்யாமொழி புலவன் புகட்டிய உலக பொதுமறையின் படி இல்லறத்தில் தனது இல்லத்திற்கே தன் இன்னுயிரை அர்பணிப்பாள் பெண்….
அப்படி பாடும் படும் பெண்கள் அனைவருக்கும் கிடைக்குமா இவ்வரம்…
சிலருக்கு எட்டாகனியே…
மாலையில் உடல் களைத்து உள்ளம் சோர்ந்திருக்கும் தருணம்…
என்னவனின் கைகள் என் பாதங்களை வருட என் பாதங்கள் என்ன தவம் செய்தனவோ நானறியேன்
இன்றுவரை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்னவனின் வருகைக்காக…
எனக்கும் இவ்வரம் கிடைக்க வேண்டும் என்ற பேராவலுடன்…
- ரஞ்சன் ரனுஜா(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
