தலைப்பு: கிலி பற்றிய கிளி
என் சோகம் எதுவென்று
யார் அறிய கூடும்
பெண் சோகம் என்றே
ஊர் சொல்ல கூடும்
ஊசியிலை காட்டுக்குள்ளே
காடு அளக்கும் வேலையிலே
சுற்றி வந்த காலத்திலே
அலையாடும் குழலோடு
ஓடிவந்த பெண் ஒருத்தி
என் தோள் பற்றி கெண்டாள்
கிளி போலத்தான் இருந்தாள்
கிலி பற்றிய பெண் அவள்
கிலி பற்றிய கிளி
என்னை பற்றிய தாள்
களிப்புற்று நானும்
களைப்பு அற்று இருந்தேன்.
அவள் நினைவாளே
பசலை பிணியாலே
பணி மறந்து நானும்
பயனற்று போனேன்
பற்றி எறியும் காட்டில்
விறகு வெட்டும் நிலையில்
அவளை தேடி திரிந்தேன் சர் கணேஷ்