குங்குமம்…..
மங்கலத்தின் அடையாளம்..
மஞ்சளோடு சேர்ந்து
மகிமை பெறும்.
பெண்கள் நெற்றியில்
பாங்காய் வைத்தால்
மணம் செய்தோர்
முன்வடுகில்
குங்குமம் காணின்
அனைவரும்
மனதில் நிறுத்தி
வணங்குவர்….
ஸ்டிக்கர் பொட்டில்
நிறம் நிறமாய்
மிளிரும் முகங்கள்
காலத்திற்கு ஏற்ற
கருத்தாகக்
கருதலாம்… எனினும்
என்றும் இனிமை
பண்பின் வீடாய்
பாங்குடன் ஒளிரும்
குங்கும முகமே
முகமன் உனக்கு!
இருந்தாலும் சிறப்பு
சிந்தினாலும் நல்ல
சகுனம்…
கரைந்தாலும்
நல்வரவு…
அருச்சித்தாலும்
ஆசிகள்…
குங்கும மங்கலம்
எங்கும் தங்குக..
S. முத்துக்குமார்