குறை சொல்லும் யாராலும்
வழி சொல்லிட இயலாது
எதை இழந்தாய்?
இன்னும் சாதிப்பதற்கு
நிறையவே இருக்கிறது
துரோகம் தந்தவர்களை
பழி தீர்த்திட எண்ணிடாதே
அதிலும் ஒரு அனுபவ பாடம் உள்ளதென ஏற்றுக்கொள்
யார் கை விட்டாலும்
நம்பிக்கையொன்றை விட்டு விடாதே!
முயற்சியோடு போராடு
நிச்சயம் ஒருநாள்
உன் வழிகளில்
உதயமாகும் பல ஒளிக்கீற்றுகள்!
-லி.நௌஷாத் கான்-