குளம்பியின் சுவையில் குழப்பம் தெளிந்தேன்!
தெளிந்த நொடிகளில் சிந்தையில் அமிழ்ந்தேன்!
அமிழ்ந்த நேரத்தில் முன்னாட்கள் கடந்தேன்!
கடந்த நிகழ்வுகள் மனக்கண்ணில் கண்டேன்!
கண்ட செய்திகள் அலசியும் ஆய்ந்தேன்!
ஆய்ந்த விஷயங்கள் உரைத்திட துணிந்தேன்!
துணிந்த உணர்வுகள் மேலிட நடந்தேன்!
நடந்த பாதையின் காட்சியில் திகைத்தேன்!
திகைத்து மலைத்து உண்மையை உணர்ந்தேன்!
உணர்ந்தது காதல்தான் – உன்னிலும் அதிகமாய் நாட்டிடம்!!
—பூமலர்
படம் பார்த்து கவி: குளம்பியின் சுவையில்
previous post