தலைப்பு கேக்கு எனும் தெய்வம்
கேக்கு தா
வாழ்த்து பாடல்
கேக்கு தா
கேக்கு நானும்
வாழ்த்தும் பா
கேக்கு தா
கேக்கு போல்
வாழ வேண்டும்
என வாழ்த்தவா!
நொதித்தல் நுரையின்
பரிணாமம் தான்
கேக்கு நான்
உரைபனிக்குள்ளே
உயிர் வாழ்வேன்
உங்கள் வாழ்த்துகளாளே
உருகி போவேன்
விளக்கு ஏற்றி வழிபடுவதும்
கேக் கோடு வாழ்த்து பாடுவதும்
வாழ்வில் வழக்கமானது
பணக்காரன் பட்டியலில் இருந்தேன்
சாம்பியன் வாழ்வோடு இணைந்தேன்
உயிர்களெல்லாம் சரி நிகர் சமம்
என உணர்ந்தேன்
சமமாய் இருப்பது
தெய்வத்திற்கு நிகரானது! சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)