சதுப்பு நில காட்டினிலே
நீர் நிலத்தில் வாழ்பவளே
இருப்பிடம் இரண்டு கொண்டதால்
உன்னை பெண்பால் என்று சொல்லவா?
சுரண்டலுக்கு ஆட்பட்ட பெண்போலே
உணவு உண்ணும் போதும்
கண்ணீர் வடிக்கிறாய்
உடல் உப்பை எல்லாம்
கண்ணீரால் குறைக்கிறாய்
உயிரோடு இருக்கையிலே
உன் தோல் அருவருப்பு தோல் அருவருப்பு
இறந்த பின்னாலே
அதன் மதிப்பு பளபளப்பு
கஜேந்திரன் கால் கடித்தாய்
சாஸ்திரத்தில் இடம் பிடித்தாய்
முதலை முதலீடு செய்த
முதலாளிக்கு முதலையே
உருவகமாய் உரு எடுத்தாய்
மண்ணில் மனிதரெல்லாம்
முதலை கண்ணீர் வடித்தேனும்
முதலை தோலில் உடை தரிக்க
முதலின் வாழ் பிடிக்கிறார்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)