சதுரங்கத்து ராணி ஆடிடுவாள்
சதிராட்டம்!
எத்திக்கும் பயணிப்பாள், எதிர்ப்போரைக் கலங்கடிப்பாள்!
சாதுர்யமாக ஆடினாலோ
ஒரு ராணி என்ன?
ஒன்பது ராணிகள் கூட அவதரிப்பர்
அக்கால ராஜாவின் அந்தப்புரம் போல!
காட்டு ராஜாவின் ராணியோ
வேட்டையாடிக் குலம் காப்பாள்.
தேனீக்களின் ராணியோ
வேலைக்காரத் தேனீக்களின்
வியூகமான பாதுகாப்பில்…
நம் இல்லத்து ராணியோ,
மணக்கும் மதுரை மல்லி
தலையில் வைப்பாள் கிள்ளி
மணக்க மணக்கச் சமைத்து
மணந்தவனின் குலம் காப்பாள்.
இன்று
வளையலிட்ட கைகளெல்லாம்
வலிமையான கரங்களாச்சு!
பெண்களில்லாத் துறையைக்
காண்பதே அரிதாச்சு!
ஆனாலும்
ஒருபெண் தான் சார்ந்த
முடிவுகளைத் தானே எடுப்பாளாயின்,
எந்நாளும் அவளே ராணி…
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)