சதுரங்க ஆட்டத்தின் ராணி
எத் திசையிலும் செல்லக்கூடியவள்
எத்தனை கட்டத்தையும் தாண்டக்கூடியவள்
அவளை வீழ்த்துவது கடினம்
வீழ்ந்து விட்டால் அவளின்
ராஜாவும் ராஜாங்கமும் அழிந்தது
தன்னவனின் இதயத்தில் மகாராணியாக வீற்றிருக்கும் பெண்ணவள் இறந்து விட்டால்
அவனின் வாழ்க்கையில் சர்வமும் ஸ்தம்பித்து விடுகிறது.
- அருள்மொழி மணவாளன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)