மருத்துவ உறையில்
விரல்கள் ஐந்து…
இங்கோ இரண்டு…
பாத்திரம் பார்த்து
இறக்கவும்
ஏற்றவும்…
சமையல் அறைக்
கருவிகள்
எடுக்கவும்…
கைகளாய்
உதவும்….
கைகளைக்
காக்கும்…
பழகிய கைக்கு
உறை இல்லாது
போனால்
கையறு நிலைதான்.
கைகளின்
பாதுகாப்பு கவசம்
கையுறை..
S. முத்துக்குமார்