சாப்பிட்ட தட்டை கழுவி வைக்க
கற்க வேண்டி கத்துவாள் அம்மா!
கைபேசி விடுத்து புத்தகம் எடுத்து படிக்க வேண்டி திட்டுவார் அப்பா!
அழுக்குத் துணியை கழட்டி எரியாமல்
கூடையில் போட கொட்டுவாள் அக்கா!
மிதிவண்டி ஓட்டிக் கீழே விழுந்து
சக்கரம் நெளிந்தால் அடிப்பான் அண்ணா!
புத்தகம் நடுவே பேப்பரைக் கிழித்து வகுப்பில் போட்டு விளையாடி நின்றாள் கண்டிப்பார் ஆசிரியர்!
சாலை விதிகளை மதிக்காமல் நடந்து
விபத்துக்கள் செய்தால் தண்டிப்பார் காவலர்!
இது போன்று எத்தனையோ! நடந்திட்ட பொழுதினிலே என் மனதின் சாத்தானை வெளியே விடாதே என்னுள் வாழும் புத்தரே!! --- பூமலர்