- சாரல் இரவு *
கண்ணாடி போர்வையில்
சிந்தும் கண்ணீர்
துளிகளுக்கு ஆறுதல் கூற
விடியலாய் விண் மினி
பூச்சுகள் வட்டமிடுகின்றன;….
வற்றாத கங்கையோ
மன பாரம் குறையாத
மங்கையோ
மழைச் சாரலுக்கு மயங்காத
மனமில்லை;….
கார்மேக இருளில் புற்க்களுக்கு நடுவே புதையுன்டு,,,
கண்களுக்கு விருந்தளிக்கும்,,,
வின்மினிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை உலகின் முதல்
கண்சிமிட்டும் மின்விளக்குகள்
என்று….!!!
எதிர்பாரா விருந்தாலியான
மழை துளிகளோடு
பயணிக்கும் இரவுகள்
மனதின் நினைவு
புத்தகங்களில் நீங்கா
பக்கங்களாகி விடுகின்றன …..!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.