எதுவும் இல்லா நேரம்,
நேரம் இல்லா
பொழுது…
கை கொடுக்கும்
சிற்றுண்டி….
சற்றே மசாலாவும்
சிறு காய்கறியும்
சுவை கூட்டும் தான்.
மைதாவின்
தாக்கமும்
பல் படாமல்
வாய்க்குள்
வழுக்கிச் செல்லும்
வேகமும்..
அபாயத்தின்
அறிகுறி…
சிக்கலில் சிக்கியவன்
புலம்புவான்
“நொந்து நூடுல்ஸ்
ஆனேன்” என்று..
புரோட்டா வின்
நாகரிகக்
குழந்தை இது!!
🌹🌹🌹
S. முத்துக்குமார்