சிங்கத்திற்கு நரியின் துணை உண்டு
மற்றவைக்கும் உண்டல்லவா ஒரு துணை தன் இரையைத் தேட
முதலையே!
உனக்கு நீயே துணை
உன் இரையைத் தேட
நீருக்குள் வசிப்பது உனது தனித்துவம்
தரைகளில் உறங்கி நில பங்கு சண்டையில் ரத்தக் களரி உருவாக்கும் மானிடர்கள் எங்கே?
நீ எங்கே?
அமைதியற்ற தரை போன்ற வதிவிடம் அல்ல
நீ வாழும் நீர் தேசம்
அது ஓர் இயற்கை சூழ்ந்த எல்லையில்லா தேசம்
உனக்கான தியான நிலையம் அதுவே!
உனக்குரிய பிரச்சினையை
தனிஒருவனாக நின்று போராடி வெல்லும் நீ
தன்னம்பிக்கையின் அடையாளமாவாய்!
உன் உண்மை ரூபம் அறியாது
உன்னையே சுயநல அரசியல் வாதிகளுக்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் ஒப்பிடுவதை மானிடர்களின் அறியாமை
அதுவென
அறியத் தோன்றுகிறதே!
M.W Kandeepan
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)