சிங்க பெண்
காட்டில் யுக்தியறிந்து
வேட்டையாடுவது
பெண் சிங்கத்தின் சிறப்பு…..
தன்னை ராஜாவென
பிதற்றிக் கொண்டு கர்ஜனை செய்வது
ஆண் சிங்கத்தின் சிறப்பு…..
அற்ப மானிட பிறவியிலும் அதே….
சொற்ப பணத்தில்
குடும்பத்தை போராடி வழி நடத்தும் பொறுப்பு
மனைவியின் சிறப்பு…
குடித்து கூத்தாடிவிட்டு
தன்னை குடும்ப தலைவன் என மார்பு தட்டிக் கொள்வது
கணவனின் சிறப்பு….
அதே தலையெழுத்து தான்…
இந்த சதுரங்க ஆட்டம்..
இரண்டு கோட்டைகளுக்கு மத்தியில்..
தன் ராஜாவை காப்பற்ற
அமைச்சர்கள்
குதிரை படை
காலாள் படை இவர்கள் துணையுடன்
ராணி யுக்தியாக போராடி வெல்ல வேண்டும்.
விளையாட்டாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா… ?
போராட்டம் என்பது…
பெண்ணின் தலையெழுத்தா….?
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் ஒரு பெண்ணே காரணம்…
அது வாழ்க்கையாக இருந்தாலும்…
விளையாட்டாக இருந்தாலும்….
போராடி வெற்றியின்
எல்லையை தொடு சிங்க பெண்ணே…🙏
— இரா. மகேந்திரன் —
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)