சிரித்தேன்
சத்தமாக சிரிக்காதே
என்றார்கள்
பேசினேன்நாங்கள்
பேசும் போது
நீ
பேசாதே என்றார்கள்
கேள்வி கேட்டேன்
வாயை மூடு என்றார்கள்
எதற்காக
என்று எதிர் கேள்வி கேட்க
நீ ஒரு பெண்
என்றார்கள் ஆனால்
இதை என்னை
பார்த்து சொன்னதும்
ஒரு பெண் தான்
என்பதை
அந்த பெண் மறந்தது
யார் தவறு 💓 ரியா ராம் 💓
படம் பார்த்து கவி: சிரித்தேன்
previous post