சில்லிடும் காலை சிங்காரவேளை சிட்டுகளாக நாம் பறந்தோம் சித்திரக் கல்லூரிக்கு… வானம் எனும் மெய்யாட்டியின் பொற்றோடுகளின் ஜொலிப்பில் பொங்கிடும் ஆகாய அழகில் நானும் நீயும் ஒன்றாக… உயர்ந்த மாடங்களுக்கிடையில் உற(ரு)வினைக் காட்டும் கண்ணாடியாய் ஒடும் நீரில் நம்மை ரசித்தோம்… ஊதாப் பூக்களின் சங்கமத்தில் நம் கேண்மை உணர்ந்தோம்… துவிச்சக்கரவண்டியின் துள்ளல்களில் துரத்திப்பிடித்தோம்… காலமாற்றத்தால் கண்டவையாவும் கனவுகளாகி, ஏக்கங்களோடு தனிமையில்… -பூ. வசந்தாரஞ்சனி –
படம் பார்த்து கவி: சில்லிடும்
previous post