தலைப்பு : சுடரின் நீள(ல)ம் ஒளி வெள்ளம்
_—————————————–
வண்ண மலர்கள் எடுத்தேன்
குடுவையில் வைத்தேன்
மலரின் நலினத்தை
உலகறிய நினைத்தேன்
விளக்கு ஏற்றி அங்கே
ஒளி வெள்ளம் கொடுத்தேன்!
கண்ணாடி குடுவையிலே
பட்டு சிதறிய ஒளியாலே
இடமெல்லாம் அழகாச்சு!!
ஒளியில் வந்த அனலாலே
வண்ண மலரெல்லாம் வாடியாச்சு!!!
ஒளி தந்த விளக்கு
மலரின் ஒளி வெப்பம் தணிக்க
உடல் உருகி போச்சு
உண்டான நீராலே
அனல் அடங்கி போச்சு!
விளக்கு அதை எடுத்து
நெற்றி பொட்டிடை நிறுத்தி
நீ யாரென கேட்டேன்?
கை விளக்கு ஏந்திய
காரிகை தாங்கியதும் !
ஊண் உடலை அகலாக்கி
உயிரை திரியாக்கி
ஆழ்வார்கள் ஏற்றியதும்!!
என்னை தான் என்றது விளக்கு!!!