ஓட்டம் ✨
காடு மேடு
கழனி கரையென
மாடென ஓடி
ஓடென தேய்ந்தே
களைத்து களைத்து
உழைத்த போதெலாம்
இதயத்திலும் அடைப்பில்லை
இரத்தத்திலும் கொழுப்பில்லை
வாழ்வோடிணைந்த ஓட்டமதால்
வாட்டமிலாதே வாழ்ந்தனரே
ஓட்டத்திற்கு நேரமொதுக்கியே
ஓடுகின்றோமே நோய்களுடனே
ஆசனத்தில் அமர்ந்துழைத்து போசனத்தை பெருக்கிக்கொண்டு
பேரும் தெரியாதே பெருவாரி நோய்கள்
காசது சேர்த்திடவே
வேசங்கள் போட்டுவிட்டு
சுவாசமும் மோசமாக்கியே
நாசமாய் போகின்றோம்
ஜே ஜெயபிரபா