சூரியனுக்கும் பூமித்தாய்க்கும் நடக்கும் நீயா நான போட்டியில்…
பொறுமையின் சிகரமான பூமித்தாயின் தனல் தாங்காமல்…
ஒன்றும் அறியா மட மக்கள் மடிந்து போய்விடுவரோ என அஞ்சி…
சுட்டெரிக்கும் சூரியனை கருமேகங்கள் சூழ…
காற்று வந்து மென்மையாக மேகத்தின் தேகம் வருட…
தாயை அணைத்து சாந்தமாக்க வருகிறது…
பூமித்தாயின் நீர்க்குழந்தைகள்
மழையாக…..
-புவனா