சூழ்ந்திருக்கும் பிரபஞ்சத்தின் பிரதிபலிப்பே,
கண்ணாடிக் குப்பிக்குள்
தோற்றப் பிழையாய்!
நிலையில்லா வாழ்வில்
நிலைத்திருக்கும் ஆன்மாவாய்!
நிறமோ முகமோ நம் கைகளில்
இல்லையன்றோ!
இறைவனின் பேரருளால் தாயும்
தந்தையும்!
நம்முடைய பிரதிபலிப்பு வளரும்
சூழ்நிலையில்!
கண்ணாடிக்குப்பியில் தோன்றும்
பிரதிபலிப்பு அது இருக்குமிடத்தில்!
அண்டத்தில் உள்ளதே, பிண்டத்திலும் உள்ளது…….என்ற
மாபெரும் தத்துவத்தின் விளக்கமோ!
மாயப்பிறப்பறுக்க. மனமின்றி,
தீராப்பயணத்தின் மாயவலையில்,
மீண்டும் மீண்டும் சிக்கிக்கொள்ளும்
சித்தாந்த ரகசியமோ!
எது எப்படியோ?…….
இக்கண்ணாடிக் குப்பிக்குள்
சிக்குண்ட தோற்றப்பிழை போலத்தான் நம் வாழ்வும்!
நாம் ரசித்து அனுபவித்து
இன்புறும் இயற்கையை இயன்றவரை அடுத்த தலைமுறைக்கும் விட்டுவைப்போமே!
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
