கடவுளுக்கு சூட வேண்டுமென செம்பருத்தி பூவினை கொய்கிராய்… அடியே அப்படியே மனசையும் கொய்வதை எந்தக் கடவுளிடம் சொல்ல…
உன் கைபட வேண்டுமென தான் விரைவிலேயே மலர்கின்றன என் வீட்டு செம்பருத்திப் பூக்கள்…
உன் சோம்பலை அனுப்பி பூக்க வைத்து விட்டாய் பூவை…செம்பருத்தி பூ பிடிக்குமென என் வீட்டில் நீ செடி வளர்த்தாய்… எதிர் வீட்டில் நீயும் என் வீட்டில் செடியும் நமக்குள் காதலும் வளராமல் இருக்குமா என்ன??…
செம்பருத்தி பூ பிடிக்குமென என் வீட்டில் நீ செடி வளர்த்தாய்… எதிர் வீட்டில் நீயும் என் வீட்டில் செடியும் நமக்குள் காதலும் வளராமல் இருக்குமா என்ன??…
ரோஜா பூவுக்கு செம்பருத்தி பிடிக்குமென இன்று தான் அறிந்தேன் உன் கைபட்டதும்…
முகர்ந்து மட்டும் தாராமல் சூடியும் கொடு… நீ நவீன ஆண்டாள் ஆவாய்…
உன் கை பட்ட பூவை பெற்றுக் கொள்வதற்காகவே உன்னுடன் ஆலயம் வருகிறேன்…
உன் இதழ் சிவப்பை கடன் கொடுத்து விட்டாய் செம்பருத்திப் பூவுக்கு…
வெட்கமொன்றை சிரிப்பாக தந்துவிட்டு செம்பருத்தியைப் பறித்து செல்கிறாய் அப்படியே மனசையும் என்பதை சொல்லத்தான் வேண்டுமா என்ன???
கங்காதரன்