சொற சொற தேங்காய் நார்;
கர கர மண் சாம்பல்
இவற்றுக்கு கையசைத்து விடை கொடுத்தேன்
நன்றுதான்! கைகளுக்கு “மெத்”தென இருக்குமிது
நன்றாகவே விளக்கும்
விளக்குமா இது;
“பளபள” வென?
கும்பகோணம் வெங்கலப்பானையையும்;
ஏரல் குத்து விளக்கையும்;
தேங்காய் நாரை
என்னையும் அறியாமல்
என் கை பத்திரப்படுத்ததே
கை எட்டும் தூரத்தில்.
சசிகலா விஸ்வநாதன்