தனித்து விடப்பட்ட படகாய்
மனம் தத்தளிக்கிறது
நீச்சல் தெரிந்தும்
நீந்துவதற்கு எண்ணமில்லை
துடுப்பு இருந்தும்
கரையேறுவதற்கு விருப்பமில்லை
என்னாச்சு எனக்கு?
என நீங்கள் கேட்பதும்
எனக்குள் ஒலிக்கிறது
என்ன கேட்டு என்ன பயன்?
அவள் காதலே கிடைக்காத போது
கரையேறி என்னவாக போகிறது
சாவதற்கு முன்
உங்கள் செவிட்டு காதுகளுக்கும்
கேட்கும் படி
சொல்லி விட்டு செல்கிறேன்
எல்லா நதியையும் உள்வாங்கும்
அந்த சமுத்திரத்தை விட
இந்த காதல் கடல் பொல்லாதது
மனமிருந்தால் மார்க்கமுண்டு
மனமில்லாத இடத்தில்
காதலேது?!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
