முதலாளி அறியாமல் முட்டிபோட்டு மெல்ல அமர்ந்து கொள்கிறேன்!
என்றுமே கிட்டாத ஐந்து ரூபாய்
மிட்டாய் கிடைத்தும் உண்ணாது பத்திரப்படுத்திக் கொள்கிறேன்!
குடௌவுனுக்கு ஓடுவதைத் தவிர்க்க
அடுத்த வாரம்தாங்க வருமென சத்தமில்லாமல் பொய்யுரைக்கிறேன்!
கடை வாசலில் வீற்றிருக்கும்
வெள்ளிப் பிள்ளையாரிடம்
வேண்டியபடியே விடுதி செல்கிறேன்,
மூன்று நாட்கள்
உதிரத்தைத் தாங்க
உரிய பொருள் வாங்க
ஊதியம் கிட்டும்வரை தள்ளிப்போகட்டுமே என!
புனிதா பார்த்திபன்