தாயின் பிரிவில்
தனது சோகத்தை
அடக்கி
இங்கு ஒரு வன்
புலம்பியநிலையில்
அவன் உயிர் போவது
கூட அவனுக்கு
விடுதலையாக இருக்கும்
ஆனால் தாயின்
இழப்பை சகிப்பது
அவன் இறக்கும்வரை
வலிக்கும் வதை
மனம் ஏற்று கொள்வதில்லை
பிரிவை
மனதிற்கு பாசம்
காட்டவே தெறிகிறது
பாசம் இல்லாத இடத்தில் மனம் பாவம் அழுதுவிடுகிறது
பாவம் அவனது தாய்
அவன் அருகில்கூட
இருப்பாள்
அவனை தொட முடியாமல் தவிப்பாள்
பாவம் அவளுக்கு
அவனைத்தவிர
வேறு எதுவும் தெறியாது
தன்பிள்ளை
தன்பிள்ளை
என்று சொல்லி
அவனுக்கு தாங்க
முடியாத சோகத்தை
கொடுத்துவிட்டு
சென்றுவிட்டாள்
அவனுக்கு
அம்மா இல்லாத
உலகம் ஒரு சுடுகாடு
கொடியவதைமிக்க உலகம்
M. W Kandeepan
.(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)